Thursday, November 11, 2010

Naa. Muthukumar's Kavithai :: காதலித்துக் கெட்டுப்போ:

I read this Kavithai in Ananda Vikadan way back in 2002. Had to share with a friend now and since most of the social networking sites have word limit for the updates i am posting it here.
This one inspired me to write some kirukkal kavithaigal on my own... so this kavithai is always close to my heart :P



காதலித்துக் கெட்டுப்போ:

அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
தம்பிகள் தேடிப்போ
தூதுக்குத் தயார்செய்
தத்துவங்கள் கேட்காதே
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுதக் கற்றுக்கொள்
விதவிதமாய் பொய் சொல்
பின்தொடர்ந்து பல் இளி
பொறுக்கி என்பாள் பொறு
செருப்படிகள் கணக்கெடு
விழி ஆற்றில் விழு
பூப்பறித்துக் கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்லச் செத்து மீண்டு வா
திகட்டத் திகட்டக் காதலி.

- நா.முத்துக்குமார்

No comments: